திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது, அடையாள அட்டை வழங்குதல், வாக்குச்சாவடி முகவரிகள் நியமனம், வாக்கு எண்ணிக்கை மையம் முகவர்நியமனம், தேர்தலில் வாக்களித்தல் தொடர்பாக ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹரிஹரன், முத்தையன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகரமன்ற தலைவர்கள் சங்கீதாவெங்கடேஷ், காவியாவிக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி, நகராட்சி பொறியாளர்கள் உமாமகேஸ்வரி, ராஜேந்திரன், சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், ரேவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.