அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், கடையில் பொருட்கள் வாங்கும் போது, அதற்கு அவசியம் ரசீது வாங்க வேண்டும். உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியினை கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என்றார். தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கதிரவன் பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடு குறித்தும், அதில் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் நுகர்வோர் தர முத்திரைகள் பற்றியும் பேசினார். வக்கீல் சங்கர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றியும், நுகர்வோர் நீதிமன்றங்களை எப்படி அணுகுவது என்பதை பற்றியும் பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு வரவேற்றார். முடிவில் முதுகலை தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story