நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், பொது வினியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில செயலாளர் ராசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story