நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விழுப்புரம் மண்டல அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு விரோதமாக கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு முதுநிலை மண்டல மேலாளராக நியமித்ததை கண்டித்தும், அந்த நியமன ஆணையை ரத்து செய்யக்கோரியும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரியும், காலதாமதமாக நெல் இயக்கத்தினால் ஏற்படும் எடை குறைவிற்கு கொள்முதல் பணியாளர்களை பலிகடா ஆக்குவதை கண்டித்தும், சுமைதூக்கும் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பதை கைவிடக்கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் திருஞானம் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் தொ.மு.ச. மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், மண்டல செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் தியோப்பிலஸ், அண்ணா தொழிற்சங்க பேரவை மண்டல செயலாளர் பழனிவேலு, பாரதீய மஸ்தூர் சங்க மாநில துணை செயலாளர் ஞானப்பிரகாசம், பாட்டாளி தொழிற்சங்க மண்டல செயலாளர் கோவிந்தசாமி, அம்பேத்கர் தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் அய்யப்பன், அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல செயலாளர் தவமணிவாசன், சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் முருகன், இந்திய தேசிய தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் இளமுருகு உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story