4 மின் கோட்டங்களில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


4 மின் கோட்டங்களில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

4 மின் கோட்டங்களில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரவிஜய், வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட்டு, நுகர்வோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்படும். அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல் கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 13-ந் தேதியும், செஞ்சியில் 20-ந் தேதியும், திண்டிவனத்தில் 27-ந் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டம் நடைபெறும் நாளன்று அரசு விடுமுறையாக இருந்தால், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலைநாளில் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story