மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 12:39 AM IST (Updated: 5 July 2023 11:53 AM IST)
t-max-icont-min-icon

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது

விருதுநகர்

சிவகாசி

தமிழ்நாடு மின்வாரியத்தின் சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டம் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை கூறி நிவாரணம் பெறலாம் என்று சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் பாவநாசம் தெரிவித்துள்ளார்.


Next Story