மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பழனியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
திண்டுக்கல்
பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி கோட்ட மின்வாரியம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் நேரில் வந்து குறைகளை கேட்டு தீர்வு காண உள்ளார். எனவே பழனி கோட்ட பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மின்வாரியம் சார்ந்த தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story