மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 6-ந்தேதி நடக்கிறது.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை கோட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந் தேதி(புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நாகை இரண்டாவது கடற்கரை சாலையில் முதல் தளத்தில் இயங்கி வரும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் தலைமை தாங்குகிறார். இதில் நாகை, வெளிப்பாளையம், நாகூர், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய பிரிவுகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story