மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட குரும்பூர் உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 9-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட எட்டயபுரம் உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 23-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மேற்பார்வை என்ஜினீயர் குருவம்மாள் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story