குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க நுகர்வோரிடம் ஆர்வமில்லை


குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க நுகர்வோரிடம் ஆர்வமில்லை
x

தேனியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமில்லாததால் குறைவான அளவிலே நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர்கள், நுகர்வோர்கள் சிலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் பங்கேற்றனர். இதனால், கூட்டரங்கு வெறிச்சோடி காணப்பட்டது. சிலிண்டர் விற்பனை நிலையத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 2 பேர் பேசும் போது, "தொழிற்சங்கத்தில் சேர்ந்ததால் எங்களை பணி நீக்கம் செய்து விட்டனர்.

எனவே, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். மேலும், சிலிண்டர் விற்பனை முகவர்கள் பேசும்போது, "ஏழை குடும்பங்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த திட்டத்தில் இணையாமல் மண்எண்ணெய் வாங்கி பயன்படுத்தும் ரேஷன் கார்டுதாரர்களை இத்திட்டத்தில் இணைய அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும்" என்றனர். கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி பேசும்போது, "இந்த கூட்டத்தில் நுகர்வோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பது இல்லை. இதனால், ஒவ்வொரு மாதமும் நடக்கும் கூட்டத்தில் அரைத்த மாவை அரைப்பது போன்று சில பிரச்சினைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் விவாதிக்கிறோம். மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றால் தான் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வுகள் ஏற்படுத்த இயலும்" என்றார்.


Next Story