கைது செய்யப்பட்ட வாலிபர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பா?


கைது செய்யப்பட்ட வாலிபர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பா?
x

நாகர்கோவிலில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட வாலிபர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட வாலிபர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

செல்போன் பறிப்பு சம்பவம்

கடந்த சில நாட்களாக நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன.

இதுதொடர்பாக கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் புத்தேரி ஏ.கே.நகரை சேர்ந்த வீரமணி (வயது 63) என்பவர் சம்பவத்தன்று இரவு வடசேரி பஸ் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.

3 பேர் கைது

இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வடசேரியில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மாதவலாயம் மைதீன்புரத்தை சேர்ந்த முகமது உமர் (வயது 19), ஆரல்வாய்மொழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரிய நரேஷ் குமார் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவலில்...

இந்த 3 பேரும் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் எனவும், இவர்களுடன் மேலும் சிலரும் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த 16 வயது சிறுவனை தவிர்த்து மற்ற 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின் மூலம் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும், பல வழக்குகளில் தொடர்புடைய செல்போன்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக போலீசாரால் கூறப்படுகிறது.


Next Story