கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து


கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடிய கன்றுகுட்டி மீது மோதாமல் இருக்க திடீரென நிறுத்திய கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடிய கன்றுகுட்டி மீது மோதாமல் இருக்க திடீரென நிறுத்திய கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி, கிருஷ்ணகிரி தர்மபுரி சாலையில் நேற்று மாலை கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடி வந்த கன்றின் மீது மோதாமல் இருக்க கன்டெய்னர் லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதின. இந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க பின்னால் வந்த லாரியை திருப்பிய போது மற்றொரு லாரியுடன் மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் திடீர் சத்தம் கேட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் எதிர்திசையில் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சென்ற, 4 கார்களும் மோதின. தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பகுதியில் 6 கார்கள், 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. ஆனால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.ஆர்.பி., டேம் போலீசார் விரைந்து வந்து சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை திருப்பினர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story