கார் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 3 பேர் படுகாயம்
கார் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 3 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன், செல்வராஜ், செந்தில்குமார். இவர்கள் 3 பேரும் ஒரு காரில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அன்னவாசல் அருகே முத்துடையான்பட்டியில் வந்த போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பார்சல் பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த புதுக்கோட்டை வடக்கு இரண்டாம் வீதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 39), பழனியப்பா நகரை சேர்ந்த செல்வராஜ் (47), ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (46) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவர் சென்னை நந்தனம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த புவியரசன் (42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.