குடிநீர் தொட்டியில் அசுத்தநீர் கலந்த விவகாரம் - சிபிசிஐடி 7-வது நாளாக விசாரணை


குடிநீர் தொட்டியில் அசுத்தநீர்  கலந்த விவகாரம் - சிபிசிஐடி 7-வது நாளாக விசாரணை
x

புதுகோட்டை இறையூரில் குடிநீர் தொட்டியில் அசுத்தநீர் கலந்த தொடர்பான வழக்கில் சிபிசிஐடி 7-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்த நீர் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் 7-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையிலான போலீச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story