திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தென்காசியில் வக்கீல் அசோக்குமார் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், ராஜஸ்தான் மாநிலத்தை போன்று வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரக்கோரியும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை தமிழ்நாடு, புதுச்சோி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story