மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28-ந்தேதி முதல் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28-ந்தேதி முதல் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 28-ந்தேதி முதல் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
மேகதாது அணை
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசு மாதம், மாதம் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாது அணையை கட்டக் கூடாது. , 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விளை பொருட்களுக்கு கொடுக்கும் வரை, விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு உதவிட வேண்டும். 100 நாள் வேலைஆட்களுக்கு கோடை காலம் 4 மாதத்திற்கு வேலை வழங்கி மீதி உள்ள விவசாய சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலைக்கு அனுப்ப வேண்டும்.
தொடர் போராட்டம்
தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை உயர்வைதடுக்க குளிர்சாதன கிடங்கு கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, போராட்டம் நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். வருகிற 28-ந்தேதி முதல் திருச்சி சிந்தாமணியில் போலீசார் ஒதுக்கிய இடத்தில் அமைதியாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.