அனைத்து கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம்


அனைத்து கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2023 1:30 AM IST (Updated: 10 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக, 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

கள்ளிமந்தையம் பகுதியில், அரசு சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்கு கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக, 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் நடராஜன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவது என்று விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் கொத்தையம், தேவத்தூர், கப்பலப்பட்டி, பொருளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story