தொடர்மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொடர்மழை எதிரொலி:  முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அணைக்கு நேற்று வினாடிக்கு 265 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 700 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் 128 அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,000 கன அடியாகவும் இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:- பெரியாறு 15.4, தேக்கடி 16, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 2.


Next Story