தொடர் மழை எதிரொலி: தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட குழாய்கள்
மருதாநதி அணையில் தொடர் மழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரும் ஆற்றையொட்டிய பகுதிகளில் பதிக்கப்பட்ட குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையில் இருந்து சித்தரேவு ஊராட்சி, தேவரப்பன்பட்டி ஊராட்சி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரும் ஆற்றையொட்டிய பகுதிகளில் பதிக்கப்பட்ட குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story