தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலை


தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலை
x

ஆனைக்குட்டம் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உள்ள 9 ஷட்டர்களில் 7 ஷட்டர்கள் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து விட்டது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலையில் ஓரிரு தினங்களில் அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும். இதனால் விருதுநகருக்கான குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேறும் தண்ணீரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story