அதிராம்பட்டினம் பகுதியில் தொடர் மழை


அதிராம்பட்டினம் பகுதியில் தொடர் மழை
x

அதிராம்பட்டினம் பகுதியில் தொடர் மழை

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமலும், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிராம்பட்டினம் பகுதியில் மாலை நேரத்தில் அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.

குறுவை சாகுபடியில் மும்முரம்

இந்த மழையால் பஸ்நிலையம், கடலோர போலீஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தொடர் மழையால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியதால் சாலையோர வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். இந்த மழையால் அதிராம்பட்டினம் கிராம பகுதிகளில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story