மின்சாரம் தாக்கி காண்டிராக்டர் சாவு


மின்சாரம் தாக்கி காண்டிராக்டர் சாவு
x

காரைக்குடியில் தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் தாக்கி காண்டிராக்டர் இறந்தார்.

சிவகங்கை

காரைக்குடி,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமலை(வயது 56). இவர் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கட்டும் காண்டிராக்டர்களிடம் சப் காண்டிராக்ட் பெற்று கொடிகளை கட்டும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று காரைக்குடி நகரில் நடந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு தி.மு.க. கொடிகளை கட்டி இருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 11 மணி அளவில் கொடிக்கம்பங்களை மீண்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். மருதுபாண்டியர் நகர் முடியரசனார் சாலை சந்திப்பில் கட்டப்பட்டிருந்த கொடிகளை அகற்றும் போது மேலே சென்ற மின் கம்பியில் கொடிகம்பம் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் வீரமலை படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரமலை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமலையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story