நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புகையான்நோய் தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புகையான் தாக்குதல் நீர் மட்டத்திற்கு மேலே பயிரின் அடிப்பகுதியில் இளம் குஞ்சுகளும், முதிர்ந்த பூச்சிகளும் சாற்றை உறிஞ்சும் தன்மையுடையது.

இதனால் புகையான் தாக்குதலுக்குட்பட்ட வயலில் ஆங்காங்கே தீயில் கருகியது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இதுகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் அல்லது வாடிய குட்டை நோய் போன்ற நோய்களையும் பரப்பும் தன்மை உடையது.

தழைச்சத்து உரங்கள்

தீவிர தாக்குதலுக்குட்பட்ட வயலில் திட்டு திட்டாக ஆங்காங்கே பயிர்கள் வட்ட வடிவில் தீயில் கருகியது அல்லது தீய்ந்த மாதிரி இருப்பது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இறுதியாக செடிகள் அனைத்துமே சாய்ந்து விடும் தன்மை உடையது. விவசாயிகள் தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதைப்போல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சு வதையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு எக்டேருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம். நீர் மறைய நீர் கட்டுவதன் மூலம் புகையான் தாக்குதலையும் குறைக்கலாம். தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது அசாடிராக்ட்டின் மூலக்கூறு 0.03 சதவீதம் 1000 மில்லி ஒரு எக்டருக்கு பயிரின் அடிப்பாகம் நனையுமாறு தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி

செயற்கை பூச்சிக்கொல்லிகளான இமிடாக் குளோபிரேட் 17.8 எஸ்.எல்.100 மில்லி அல்லது பிப்ரோபெசின் 25 எஸ்.சி. 800 மில்லி அல்லது குளோர் ஆண்டிரநிலிபிரோல் 150 கிராம் அல்லது பிப்ரோநில் 5 சதவீதம் எஸ்.சி.1000-1500 மில்லி என ஒரு எக்டேருக்கு ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி புகையான் நோயை குறைக்கலாம். மேற்கண்ட முறைகளை பின்பற்றி புகையான் தாக்குதலை வரும் முன் காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story