மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்


மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணிக்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்:

கடலூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் பேங்க் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இது பற்றி அறிந்ததும் ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்கத்துக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று கூறி பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பணியை தடுத்த நிறுத்தினர்.


Next Story