மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி


மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி நாளை நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. வேளாண்மையில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவத்தினை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் விதமாக மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி, சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பாரம்பரிய பயிர் இரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story