மதமாற்றத்தை தடுக்க வேண்டும்


மதமாற்றத்தை தடுக்க வேண்டும்
x

ஏலகிரி மலையில் நடைபெறும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏலகிரி மலைப்பகுதியில் இந்து மதம் சார்ந்த பூர்வ குடிமக்களை மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசு தலையிட்டு முறையாக விசாரணை நடத்தி இந்து மக்களை காக்க வேண்டும். பூர்வகுடி இந்து மக்களுக்கு இந்து மதம் சார்ந்த பள்ளிகள் வேண்டும்.

கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களை கிறிஸ்தவ விழாக்கள், ஊர்வலம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள செய்வது சட்டப்படி குற்றம். எனவே இந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ் உள்ளிட்ட இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிர்வாகிகள் கூட்டம் நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது.


Next Story