பட்டமளிப்பு விழா
செஞ்சி கே எஸ் ராஜா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செஞ்சி
செஞ்சியை அடுத்த செல்லப்பிராட்டியில் உள்ள கே.எஸ்.ராஜா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் தவமணி அம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் பாக்யஸ்ரீ முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர் லோகஸ்ரீ, நிர்வாக அலுவலர் டாக்டர் நித்யஸ்ரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் டாக்டர் சுசீந்திரன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் 400 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், தொழிலதிபர் ஆர்.கே.ஜி. ரவி, சரோஜாசின்னத்தம்பி, அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.