தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும்


தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும்
x

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்று முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர். மு.ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

திருப்பூர்


தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்று முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர். மு.ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

பட்டமளிப்பு விழா

திருப்பூர் மாவட்டம் முத்தூர், செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் 20-வது மற்றும் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை, பொருளாளர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.பி சரவணன் சிறப்பு விருந்தினரை வரவேற்று, கல்லூரி செயல்பாடு அறிக்கையை வாசித்தார்.

விழாவில் தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர்.மு.ஈஸ்வரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளங்கலை, முதுகலை பயின்று முடித்த 470 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:-

சிந்தனை சிற்பிகள்

கல்லூரி கல்வி பயின்று வரும் தற்போதைய மாணவ-மாணவிகள் அனைவரும் அன்றைய நாள் வேலையை அன்றே செய்திட வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் நாளை செய்து கொள்ளலாம் என தள்ளி போடும் மனநிலை கைவிட வேண்டும். மேலும் மாணவர்கள் தங்கள் நோக்கம், எதிர்கால கடமை, வாழ்வியல் நெறிமுறைகள் அனைத்தையும் மிகவும் உயர்ந்ததாகவும், சிறந்த குறிக்கோளுடன் அமைத்து செயல்பட வேண்டும். உயர்கல்வி பயின்று நம் இந்திய தாய் நாட்டிற்காக பல சாதனைகள் புரிய வேண்டும்.

மேலும் இன்றைய மாணவர்கள் நாளைய சிந்தனை சிற்பிகள் என்ற நிலைக்கு மாற தினந்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் நிறைய நூல்களை பயில வேண்டும். மாணவர்கள் மொபைல் போன்களை நல்ல நோக்கத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் எந்த காலங்களிலும், சூழ்நிலையிலும் உடல், மன நலம், தன்னம்பிக்கை, ஆரோக்கியம், ஒழுக்கம், நேர்மை, மன தைரியம், சுய சிந்தனையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு தொடங்கி உள்ள நான் முதல்வன் இணையதள திட்டம் நகர, கிராமப் பகுதி மாணவ, மாணவர்களின் தனித்திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டு திட்டம் ஆகும். இந்த திட்டம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கால வாழ்விற்கு சிறந்த வழி காட்டியாகும். இவ்வாறு கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் கல்லூரி குழு துணைத் தலைவர்கள் டி. ஏ.பொன்னுச்சாமி, ஆ.தனராணி உலகநாதன், துணை செயலாளர் பட்டாசு ஆர்.மணி, செயற்குழு உறுப்பினர்கள்ஸ்ரீ ஜெயம் டிரைவிங் ஸ்கூல் ஜி.ரமேஷ், அய்யம்பாளையம் பி.ஜி.பூபதி, உறுப்பினர்கள் வி.பி.பூபதிராஜா, என்ஜீனியர்எஸ். ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், வெள்ளி விழா குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story