பட்டமளிப்பு விழா
தென்காசியில் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது
பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தென்காசி ரெடி கல்வி மையம் ஆகியன இணைந்து நடத்திய 5-வது பட்டமளிப்பு விழா தென்காசி ஓட்டல் சவுந்தர்யா அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன் தலைமை தாங்கினார். முன்னாள் கல்வியியல் இணை இயக்குனர் சுப்பையா பாண்டி முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வில்சன் அருளானந்தன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முருகவேல், தென்காசி அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ரெடி கல்வி மையத்தை சேர்ந்த 275 மாணவர்களுக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன் பட்டங்களை வழங்கினார். ஆய்க்குடி ஜே.பி.கல்வியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி, வாகைகுளம் கல்லூரி முதல்வர் ஆனந்த், வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்லூரி முதல்வர் குளோரி தேவஞானம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி பேராசிரியர் சுப்பிரமணியன், பாம்புகோவில் சந்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஸ்மி பேகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் சுரேஷ்குமார் ஏற்புரை வழங்கினார். இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் கருப்பசாமி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் தென்காசி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் வில்சன் அருளானந்தன் செய்திருந்தார்.