மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கேட்டவரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65), சமையல்காரர். இவர், திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் பெரியகுளம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story