மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி
x

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 41). சமையல் வேலை செய்து வந்தார். நேற்று ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கன்னடிகுப்பம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்த விமலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சென்று விமல் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story