அயோத்தியாப்பட்டணத்தில் சமையல் தொழிலாளி மர்மசாவு-போலீசார் விசாரணை


அயோத்தியாப்பட்டணத்தில் சமையல் தொழிலாளி மர்மசாவு-போலீசார் விசாரணை
x

அயோத்தியாப்பட்டணத்தில் சமையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோ.மு.நகர் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த கிராம நிர்வாக விஜயராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மயங்கி கிடந்தவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த நபர் இறந்தார். இதுகுறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அப்பாதுரை மகன் பழனிசாமி (35) என்பதும், சமையல் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story