சமையல் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சமையல் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கலெக்டர் அலுவலகத்தில் சமையல் சிலிண்டர் நுகர்வோர் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் சிலிண்டர்கள் பதிவு செய்து வழங்குவதில் உள்ள குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது எடுக்கப்படும் நுகர்வு முகவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. நுகர்வோருக்கு சீரான முறையில் சிலிண்டர் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. எனவே நுகர்வோர் அமைப்பினர் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்கள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story