சமையல் கியாஸ் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம்


சமையல் கியாஸ் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

சமையல் கியாஸ் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள சமையல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சமையல் கியாஸ் நுகர்வோர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மனித உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் மருதமுத்து, விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர். இதற்கு கியாஸ் ஏஜென்சி முகவர்கள் விளக்கம் அளித்தனர்.

உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர்களை பெறுவது எப்படி என்று கேட்டறிந்த நுகர்வோர்கள், சிலிண்டர்களை டெலிவரி செய்யும்போது அதிக கட்டணம் கேட்பதாக புகார் தெரிவித்தனர். மேலும் கூட்டத்தில், சிலிண்டர்களை இறக்கும்போது வால்வுகளை சரிபார்க்க வேண்டும். சிலிண்டரில் கியாஸ் கசிவு இருந்தால் அதனை தொட வேண்டாம். திடீரென கியாஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்தால் சிலிண்டர் முழுவதும் ஈரமான சாக்குகளை கொண்டு மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன் நன்றி கூறினார்.


Next Story