அந்திவாடி அரசு பள்ளியில்சமையல் கூடம் திறப்பு விழா
மத்திகிரி
ஓசூர் மாநகராட்சி, 36-வது வார்டில் உள்ள அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5.65 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைகூடம், நமக்கு நாமே திட்டத்தில் டி.வி.எஸ். அறக்கட்டளை பங்குடன் ரூ.48 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார். ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. சமையல் கூடம் மற்றும் சுற்றுச்சுவர், உணவருந்தும் கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் மாநகரகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தைய்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர் பாக்கியலட்சுமி, டி.வி.எஸ். தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சீனிவாச சேவா அறக்கட்டளை இயக்குனர் கமலக்கண்ணன், மற்றும் கவுன்சிலர்கள் இந்திராணி, தேவிமாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை ராணி நன்றி கூறினார்.