சமையல் தொழிலாளி சாவு
திருவையாறு அருகே சமையல் தொழிலாளி சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு அருகே கண்டியூர் வடக்குதெருவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற பைசூர் ரகுமான் (வயது52) ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். . இவர் கண்டியூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்துவந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று பைசூர் ரகுமான் படுத்திருந்தார். நேற்று காலையில் பைசூர் ரகுமான் வீட்டில் இறந்துகிடப்பதாக அக்கம் பக்கத்தினர் திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? அவா் சாவில் மர்மம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story