தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை


தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
x

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 35). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது அக்கா, அண்ணனுடன் விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது சிறுமியை சாக்லெட் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர், வீட்டின் மாடிக்கு தூக்கி சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாததால் அந்த சிறுமியின் பெற்றோர் தேடிப்பார்த்தபோது சிவக்குமார் வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே ஓடி வந்தார். அவரது உடைகளில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த சிறுமியை தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

அந்த சிறுமிக்கு டாக்டர் சிகிச்சை அளித்தபோது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமாரை கைது செய்தனர்.பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரணை செய்து சிவக்குமாருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Next Story