தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தஞ்சை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த சிலமாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த குமார் வீட்டின் அருகே உள்ள ஒரு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரின் தாய் புஷ்பா தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story