குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76-வது காலாட்படை தினம் அனுசரிப்பு


குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில்  76-வது காலாட்படை தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76-வது காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76-வது காலாட்படை தினம் அனுசரிக்கப்பட்டது.

காலாட்படை தினம்

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான காலாட்படையினர் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில், வானில் இருந்து தரையிறங்கி பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களை ஸ்ரீநகரின் விமான தளத்தில் இருந்து விரட்டி அடித்தனர்.

எதிரிகளை விரட்டி இந்திய காலாட்படை காஷ்மீரையும் அதன் மக்களையும் காப்பாற்றியது. இதுவே இந்திய காலாட்படையின் முதல் வீரதீர செயலாக திகழ்கிறது. இதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

வெலிங்டன் ராணுவ மையம்

காலாட்படை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூண் சின்னத்தில் போர்களில் பங்கேற்று உயர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

இதில் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், லெப்டினன்ட் ஜெனரல் தேவ்ராஜ் அன்பு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராணுவ அணிவகுப்பு நடந்தது.

விழாவில், வெலிங்டன் ராணுவ மையம், முப்படைகள் பயிற்சிக்கல்லூரி மற்றும் காலாட்படை பிரிவை சேர்ந்த பல அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் மற்றும் பிற நிலை வீரர்கள் கலந்துகொண்டனர்.



Next Story