குன்னூர் லெவன்ஸ் அணி வெற்றி


குன்னூர் லெவன்ஸ் அணி வெற்றி
x

கிரிக்கெட் போட்டியில் குன்னூர் லெவன்ஸ் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து, சி டிவிஷனில் விளையாட விருப்பம் தெரிவித்த அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று குன்னூர் விங்ஸ் ஆப் பயர் அணியும், குன்னூர் லெவன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குன்னூர் லெவன்ஸ் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கோகுல் 90 ரன்கள் எடுத்தார். விங்ஸ் ஆப் பயர் அணி பந்து வீச்சாளர் சுனில் மார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குன்னூர் விங்ஸ் ஆப் பயர் அணி களமிறங்கியது. அந்த அணி 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குன்னூர் லெவன்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறந்த வீரராக 90 ரன்களை எடுத்த குன்னூர் லெவன்ஸ் அணியின் கோகுல் தேர்வு செய்யப்பட்டார்.


Next Story