குன்னூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம்
குன்னூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம்
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பகலில் கடும் வெயிலும் இரவில் பனி தாக்கமும் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தீயணைப்பு துறையினர் அணைத்து வருகின்றார்கள். இதே போல வீடுகள், காப்பகங்கள், மருத்துவமனைகளில் தீ ஏற்பட்டால் உடனடியாக அணைக்க பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் குன்னூர் குழந்தைகள் நல இல்ல பணியாளர்களுக்காக தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயை எவ்வாறு அணைப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு (போக்குவரத்து) நிலைய அலுவலர் கணேசன், முன்னணி தீயணைப்பாளர் சுப்பிரமணி, சைல்ட் லைன் நிர்வாகி சுசீலா உள்பட கலந்து கொண்டார்.
-