குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நீலகிரி
குன்னூர்
குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா நடக்கிறது. இந்தநிலையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கோவில் புனரமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மகா கணபதி பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story