கூட்டுறவு- வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் கூட்டுறவு- வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் விக்கிரமசிங்கபுரத்தில் வேளாண்மை துறை, கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கூட்டுறவு துறை இணை பதிவாளர் அழகிரி தலைமை தாங்கினார். அம்பை வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஷ்வரி, துணை பதிவாளர் முத்துசாமி, வேளாண்மை துறை அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு, பாபநாசம், பொதிகையடி, கொட்டாரம், சிவந்திபுரம் போன்ற பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய அரசு நிர்ணயித்துள்ள விலை மற்றும் கரும்பின் தன்மை குறித்து அதிகாரிகள் பேசினர். பின்னர் இது குறித்து விவசாயிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
விக்கிரமசிங்கபுரம் வேளாண்மை அலுவலர் சாதிக் முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் சாந்தி, துணை வேளாண்மை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.