போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
வலங்கைமான் அருகே போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வலங்கைமான்,
வலங்கைமான் அருகே போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்து
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் கடைத்தெரு பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தகராறு செய்தார். இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு செல்போன் மூலம் புகார் வந்தது.இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் மணிகண்டன்(வயது28) கடைத்தெரு பகுதிக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் மணிகண்டனை குத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
கைது
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டனை கத்தியால் குத்தியது அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள மேலகாலனி தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் சூர்யா(24) என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர்- மன்னார்குடி மெயின் ரோட்டில் சூர்யா பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்தனர்.