போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளாா்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தஞ்சை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பிராங்க்ளின் உட்ரோ வில்சன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தஞ்சை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தஞ்சையில் போலி மது மற்றும் மதுவிலக்கு சம்பந்தமான குற்ற சம்பவங்களை தடுக்க சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story