கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு


கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களிலும் நெல் விவசாயத்தை விட பருத்தி, மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பூசேரி, கடம்போடை, மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், தேரிருவேலி, ஆதங்கொத்தங்குடி, கருமல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கொத்தமல்லி சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். தற்போது இந்த கிராமங்களில் கொத்தமல்லியை அறுவடை செய்து அதை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கடம்போடை கிராமத்தை சேர்ந்த விவசாயி சாந்தகுமார் கூறியதாவது:- ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொத்தமல்லி விதைக்கும் பணியில் ஈடுபட்டு தை மாதம் அறுவடை செய்யப்படும். கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் கொத்தமல்லி விளைச்சல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. அதனால் 10 கிலோ கொத்தமல்லி ரூ.1500-க்கு விலை போனது. ஆனால் இந்த ஆண்டு அதிக மழை பெய்யாததால் கொத்தமல்லி விளைச்சல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லி விலையும் குறைந்துள்ளது. 10 கிலோ கொத்தமல்லி ரூ.1100-க்கு விலை போகின்றது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.


Next Story