வாங்கத் தயங்குமளவுக்கு மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், வாங்க ஆளில்லாத நிலையால் மல்லி எனப்படும் கொத்தமல்லி விலை குறைந்துள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

வாங்கத் தயங்குமளவுக்கு மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், வாங்க ஆளில்லாத நிலையால் மல்லி எனப்படும் கொத்தமல்லி விலை குறைந்துள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
x

வாங்கத் தயங்குமளவுக்கு மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், வாங்க ஆளில்லாத நிலையால் மல்லி எனப்படும் கொத்தமல்லி விலை குறைந்துள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி,

வாங்கத் தயங்குமளவுக்கு மல்லிகை விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், வாங்க ஆளில்லாத நிலையால் மல்லி எனப்படும் கொத்தமல்லி விலை குறைந்துள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

பனிப்பொழிவு

விவசாயத்தைப் பொறுத்தவரை லாப நட்டங்களில் பருவநிலை மாற்றங்கள் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போதைய நிலையில் உள்ள கடுமையான பனிப்பொழிவு விவசாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பொழிவால் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பனிப்பொழிவால் கொத்தமல்லி நன்கு செழித்து வளர்ந்துள்ளது.

இதனால் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ. 4-க்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுவாக பனிப்பொழிவு பல பயிர்களுக்கு பாதகமான சூழலையே உருவாக்கும்.ஆனால் கொண்டைக்கடலை, மல்லி போன்ற ஒருசில பயிர்கள் பனிப்பொழிவை சாதகமாக பயன்படுத்தி வளரும் தன்மை கொண்டவை. இதனால் மார்கழிப் பனியை கருத்தில் கொண்டு உடுமலை பகுதியில் அதிக அளவில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள் மல்லித்தழை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு கிலோ ரூ. 4

குளிர் கால சாகுபடி, கோடைக்கால சாகுபடி என ஆண்டுக்கு 2 முறை மல்லி சாகுபடிக்கு ஏற்ற பருவங்களாக கருதப்படுகிறது. ஆனாலும் தேவையை கருத்தில் கொண்டு ஆண்டு முழுவதும் உடுமலை பகுதியில் கொத்தமல்லி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 12 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 45 நாட்களில் பாத்திகளை மறைக்கும் அளவுக்கு கொத்தமல்லி தள தளவென்று வளர்ந்திருக்கும். அதுவே அறுவடைக்கு சிறந்த நேரமாகும்.ஒரு ஏக்கரில் 7 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ மல்லித்தழை ரூ. 40 க்கு விற்பனையானது.தற்போது ஒரு கிலோ ரூ. 4 க்கு விற்பனையாகி வருகிறது. மல்லித்தழையை வாங்கும் வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கு வந்து அவர்களே கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து எடுத்துக் கொள்கிறார்கள். இங்கிருந்து பெருமளவு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் மல்லித்தழையை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வராத நிலையில் கிடைத்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையே உள்ளது.குறைந்த பட்சம் ஒரு கிலோ ரூ. 10-க்கு விற்பனையானால் இழப்பை தவிர்க்க முடியும்.ஆனால் இது கட்டுபடியாகாத விலையாகவே உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story