கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது


கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது
x

குமரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கு எண்ணில் இருந்தது. பின்பு நாளுக்கு நாள் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 839 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 99 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் 9 பேர், கிள்ளியூர் வட்டாரத்தில் 8 பேர், குருந்தன்கோடு வட்டாரத்தில் 7 பேர், முன்சிறை வட்டாரத்தில் 15 பேர், நாகர்கோவிலில் 19 பேர், ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் 7 பேர், திருவட்டார் வட்டாரத்தில் 11 பேர், தக்கலை வட்டாரத்தில் 10 பேர், தோவாளை வட்டாரத்தில் 11 பேர், மேல்புறத்தில் ஒருவர் மற்றும் நெல்லையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இத்தகைய தொற்று பாதிப்பு கடந்த 3 மாதங்களை ஒப்பிடுகையில் இதுவே அதிகபட்சமாகும். நாளுக்கு நாள் தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story