கடலூர் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 11 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 708 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 6 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 94 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 5 பேர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story