குமரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா
குமரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரியில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பரிசோதனையை அதிகாரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 264 பேர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story